இந்தியாவிற்குள் நுழைய போகிறோம்; வர்த்தக ஒப்பந்தம் குறித்து டிரம்ப் சஸ்பென்ஸ்!
இந்தியாவிற்குள் நுழைய போகிறோம்; வர்த்தக ஒப்பந்தம் குறித்து டிரம்ப் சஸ்பென்ஸ்!
ADDED : ஜூலை 16, 2025 09:54 AM

வாஷிங்டன்: இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால், ''இந்தியாவிற்குள் நுழைய போகிறோம்'' என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது: நாங்கள் இந்தோனேசியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தோம். நான் அவர்களின் மிகச்சிறந்த ஜனாதிபதியுடன் பேசினேன். இந்தோனேசியாவில், எல்லாவற்றையும் நாங்கள் முழுமையாக அணுக முடியும். உங்களுக்குத் தெரியும்.
நாங்கள் எந்த வரிகளையும் செலுத்த மாட்டோம். அதுதான் ஒப்பந்தத்தின் மிகப்பெரிய பகுதியாக இருக்கலாம். நாங்கள் இந்தியாவிற்குள் நுழையப் போகிறோம். நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் மக்களால் உள்ளே செல்ல முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை முடிவு செய்ய வேண்டும் என்ற அவசரத்தில் இந்தியா செயல்படவில்லை. இரு நாடுகளும் பலன்பெறும் வகையில் முடிவுகள் இருந்தால் மட்டுமே ஏற்று கொள்வோம் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.