அமெரிக்காவில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யுங்க; ஆபர் அறிவித்தார் டிரம்ப்!
அமெரிக்காவில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யுங்க; ஆபர் அறிவித்தார் டிரம்ப்!
ADDED : டிச 11, 2024 09:25 AM

வாஷிங்டன்: 'அமெரிக்காவில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு, அனைத்து விதமான அனுமதிகளும் எளிதில் வழங்கப்படும்' என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார். அவர் அதிபராக பதவியேற்ற பிறகு, 'உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவேன். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுவதை தடுப்பேன்' என கூறியுள்ளார். இந்த சூழலில், அவர் தொழிலதிபர்களுக்கு ஒரு ஆபர் ஒன்றை அறிவித்துள்ளார்.
சமூகவலைதளத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் நபர் அல்லது நிறுவனங்களுக்கு அனைத்து விதமான அனுமதிகளும் எளிதில் வழங்கப்படும். அவர்களுக்கு எந்த விதமான தாமதமும் இன்றி அனைத்து கோரிக்கைகளுக்கும் அனுமதி வழங்குவோம். அனைவரும் தயாராகுங்கள். இவ்வாறு டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். இதற்கு டிரம்பை எக்ஸ் சமூகவலைதள உரிமையாளர் எலான் மஸ்க், நல்ல முடிவு என பாராட்டியுள்ளார்.

