வெள்ளை மாளிகை எங்களுக்குத்தான்: சொல்கிறார் டிரம்ப்
வெள்ளை மாளிகை எங்களுக்குத்தான்: சொல்கிறார் டிரம்ப்
ADDED : செப் 19, 2024 11:27 AM

வாஷிங்டன்: 'தேர்தலில் வெற்றி பெற்று வெள்ளை மாளிகையை கைப்பற்றுவோம்' என அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடக்கிறது. குடியரசு கட்சி சார்பில், டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் மோதுகின்றனர். நியூயார்க்கில் தேர்தல் பிரசாரத்தில், டொனால்டு டிரம்ப் பேசியதாவது:
கடவுளால் முறியடிக்கப்பட்டன!
40 ஆண்டுகளுக்குப் பிறகு நியூயார்க்கில் குடியரசுக் கட்சி வெற்றி பெறும். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, குற்றச்சம்பவங்கள், பணவீக்கம் மற்றும் சட்டவிரோத குடியேற்ற பிரச்னைகளில் கவனம் செலுத்துவோம். நாங்கள் வெள்ளை மாளிகையை கைப்பற்றுவோம். நாட்டை சிறப்பாக வழிநடத்துவோம். சமீபத்தில் என்னை கொல்ல எடுத்த முயற்சிகள் எல்லாம் கடவுளால் முறியடிக்கப்பட்டன. நாட்டில் மதத்தை மீண்டும் கொண்டு வருவோம்.
எனக்கு ஓட்டளியுங்கள்!
அமெரிக்கர்கள் எனக்கு ஒரு மிக பெரிய மற்றும் வலுவான பணியை வழங்கி உள்ளனர். அமெரிக்காவை மீண்டும் அனைத்து அமெரிக்கர்களுக்கும் சிறந்ததாக மாற்ற நான் பணியாற்ற உள்ளேன். நாங்கள் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை பெறப் போகிறோம். நியூயார்க் மக்களுக்கு நான் சொல்கிறேன். பயங்கரவாதிகள் மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இங்கு அதிகரித்து விட்டனர். அவர்களை கட்டுப்படுத்த எனக்கு ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

