வரி மேல் வரி விதிக்கும் டிரம்ப் கூடுகிறது 'பிரிக்ஸ்' அமைப்பின் கூட்டம்
வரி மேல் வரி விதிக்கும் டிரம்ப் கூடுகிறது 'பிரிக்ஸ்' அமைப்பின் கூட்டம்
ADDED : செப் 06, 2025 01:25 AM

புதுடில்லி:அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக, பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தலைமையில் நடக்கும் 'பிரிக்ஸ்' அமைப்பின் உச்சி மாநாட்டில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் கடுப்பான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தார். இதே போல, தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கும் 50 சதவீத வரி விதித்தார்.
இந்நிலையில், அமெரிக்க வரி விதிப்பு குறித்து விவாதிக்க, பிரிக்ஸ் அமைப்பில் இடம் பெற்றுள்ள பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தலைமையில், நாளை மறுதினம் பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடக்கிறது. இதில், நம் வெளியுறவு அமைச்சருமான ஜெய்சங்கர் பங்கேற்கிறார்.
இந்த தகவலை நம் வெளியுறவு அமைச்சகம் நேற்று உறுதிப்படுத்தியது. இந்த கூட்டத்தில், அமெரிக்க வர்த்தக கொள்கை மட்டுமின்றி, வளர்ந்து வரும் சந்தை நாடுகளின் தலைவர்களை ஓரணியில் திரட்டவும் பிரேசில் அதிபர் லுலா டா சில்வா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. தவிர, உறுப்பினர் நாடுகளும் உள்ளன.