ADDED : மே 03, 2024 01:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அங்காரா: காசாவில் மனிதாபிமான உதவிகள் தடையின்றி வழங்க அனுமதிக்கும் வரை, இஸ்ரேல் உடனான வர்த்தக உறவை துருக்கி நிறுத்தி வைத்தது.
இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் நாளுக்கு நிலைமை மோசமடைந்து வருகிறது. இதனையடுத்து, இஸ்ரேல் ஏற்றுமதிக்கு துருக்கி கடந்த மாதம் பல கட்டுப்பாடுகளை விதித்தது. இந்நிலையில், அனைத்து வர்த்தக உறவையும் துருக்கி நிறுத்தி வைத்துள்ளது. கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே 7 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடந்தது.
இதற்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம், துருக்கி அதிபர் சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் எனக் குற்றம்சாட்டி உள்ளார்.