ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த இரு இந்தியர்கள் உக்ரைனில் பலி
ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த இரு இந்தியர்கள் உக்ரைனில் பலி
ADDED : ஜூன் 12, 2024 02:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இரு இந்தியர்கள் உக்ரைன் போரில் பலியான சம்பவம் நடந்துள்ளது.
நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ரஷ்யாவில் அதிக சம்பளத்துக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி, டிராவல் ஏஜன்டுகள் பலர், ஏராளமானோரை அந்நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.ஆனால், அங்கு வேலை வாங்கி தராமல், உக்ரைனுடன் சண்டையிட, ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இரு இந்தியர்கள் உக்ரைன் போரில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும்நிலையில், தற்போது இரு இந்தியர்கள் உக்ரைனுடான சண்டையில் உயிரிழந்த சம்பவம் இந்திய தூதரகத்தின் கவனத்திற்கு வந்தது.