UPDATED : மே 07, 2024 03:28 PM
ADDED : மே 07, 2024 01:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பீஜிங்: சீன மருத்துவமனையில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்துள்ளனர்.
யுனான் மாகாணத்தில் உள்ள ஜாவோடோங் நகரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் இச்சம்பவம் நடந்தது. இத்தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கத்திக்குத்து சம்பவத்திற்குஎன்ன காரணம் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.