தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/மியாமி விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதல்

மியாமி விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதல்

மியாமி விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதல்


ADDED : நவ 15, 2026 05:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2026 05:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மியாமி: அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் பயணியர் விமானமும், சரக்கு விமானமும் மோதிக் கொண்டதில், 2 பயணியர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு, `போயிங் – 767' ரக சரக்கு விமானம் ஒன்று கொலம்பியாவின் போகோடாவிற்கு புறப்படுவதற்காக விமான நிலைய ஓடுபாதையில் சென்றுக் கொண்டிருந்தது. மற்றொரு புறம், `கோபா ஏர்லைன்ஸ்' நிறுவனத்துக்கு சொந்தமான, `போயிங் – 737' விமானம், பனாமாவில் இருந்து 166 பயணியர் மற்றும் ஆறு பணியாளர்களுடன் மியாமி விமான நிலையம் வந்திறங்கியது.

ஓடுபாதையின் ஒரு குறிப்பிட்ட சந்திப்பின் அருகே இரு விமானங்களும் சென்ற போது, பயணியர் விமானத்தின் இறக்கை முனை பகுதி, சரக்கு விமானத்தின் முன் பகுதியில் மோதியது.

இந்த விபத்தில், இரு பயணியர் காயமடைந்தனர். இதையடுத்து, பயணியர் விமானம் டெர்மினலுக்கு கொண்டு செல்லப்பட்டு பயணியர் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு விமான நிலைய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். பிற பயணியரும், பணியாளர்களும் பாதுகாப்புடன் இருப்பதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்விபத்து குறித்து அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையமும், விமான நிலைய அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us