தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/பிரிட்டன் – ஐரோப்பிய யூனியன் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள்

பிரிட்டன் – ஐரோப்பிய யூனியன் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள்

பிரிட்டன் – ஐரோப்பிய யூனியன் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள்


UPDATED : நவ 20, 2026 09:40 PM

ADDED : நவ 20, 2026 09:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 09:40 PM ADDED : நவ 20, 2026 09:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பிரஸ்ஸல்ஸ்: பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே வர்த்தகம், கார்பன் உமிழ்வு கட்டுப்பாடு மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

தடையற்ற வர்த்தகம், எல்லைக் கட்டுப்பாடு, குடியேற்றக் கொள்கை, சட்ட உருவாக்கம் மற்றும் நிதி பங்களிப்பு போன்ற விஷயங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக 2020ல் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது. இந்த உறவு முறிவு பிரெக்சிட் என அழைக்கப்படுகிறது. இந்நிலையில், இரு தரப்பு உறவுகளை மீண்டும் வலுப்படுத்தும் விதமாக பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே புதிய ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தங்களின்படி, தாவரம் மற்றும் விலங்கு பொருட்கள் மீதான வர்த்தக சோதனைகள் ரத்து செய்யப்படும். இரு தரப்பின் கார்பன் உமிழ்வு வர்த்தக திட்டங்கள் இணைக்கப்படும். மேலும், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு லட்சம் இளைஞர்கள் ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும், அங்கிருந்து ஒரு லட்சம் இளைஞர்கள் பிரிட்டனிலும் தங்கி, மூன்று ஆண்டுகள் வரை வேலை செய்ய முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us