உக்ரைன் போர் நிறுத்தம் : டிரம்ப் - புடின் தொலைபேசியில் உரை
உக்ரைன் போர் நிறுத்தம் : டிரம்ப் - புடின் தொலைபேசியில் உரை
ADDED : மார் 18, 2025 02:48 AM

மாஸ்கோ: 'உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக இன்று அமெரி்க்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் இருவரும் தொலை பேசிவாயிலாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளை கடந்து போர் நீடிக்கிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் மீண்டும் பதவியேற்றதும், உக்ரைன் போரை நிறுத்துவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
போர் நிறுத்தம் தொடர்பாக மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவில் அமெரிக்கா - உக்ரைன் நாடுகளின் அதிகாரிகள் நடத்திய பேச்சில், 30 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இருதரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளன.
இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் இருவரும் தொலை பேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த பேச்சுவார்த்தையின் போது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வந்து நிரந்த தீர்வு காண இரு தலைவர்களும் நீண்ட நேரம் செலவிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.