உக்ரைன் விவகாரம் - டிரம்ப்பை சந்திக்க தயார்: சொல்கிறார் புடின்
உக்ரைன் விவகாரம் - டிரம்ப்பை சந்திக்க தயார்: சொல்கிறார் புடின்
ADDED : டிச 19, 2024 09:11 PM

மாஸ்கோ: ''உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப்பை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயாராக உள்ளேன், '' என ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் புடின் கூறியதாவது : உக்ரைன் விவகாரம் தொடர்பாக டிரம்ப்பை சந்திக்க தயாராக உள்ளேன். அவரை எப்போது சந்திப்பேன் என தெரியாது. இது குறித்து அவர் எதுவும் கூறவில்லை. அவருடன் பேசி நான்கு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயாராக உள்ளேன். அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால், அவருடன் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளது. பேச்சுவார்த்தை மற்றும் சமரசத்திற்கு ரஷ்யா தயாராக உள்ளது.
அதிபர் பதவியில் இருந்து விலகி ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ள சிரியா அதிபர் ஆசாத்தை இன்னும் சந்திக்கவில்லை. அது விரைவில் நடக்கும். அந்நாட்டில் நடந்ததை ரஷ்யாவின் தோல்வியாக மாற்ற முயற்சி நடக்கிறது. ஆனால், அப்படி ஏதும் இல்லை எனக்கூறுவேன். எங்களது நோக்கங்கள் நிறைவேறி உள்ளது. இவ்வாறு புடின் கூறினார்.