செர்னோபில் அணு மின் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல்; உக்ரைன் அதிபர் கண்டனம்
செர்னோபில் அணு மின் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல்; உக்ரைன் அதிபர் கண்டனம்
ADDED : பிப் 14, 2025 02:49 PM

கீவ்: செர்னோபில் அணு மின் நிலையத்தில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியதற்கு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் செர்னோபில் அணு மின் நிலையத்தில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. அணு மின் நிலையத்தின் கூரை மீது ட்ரோன் விழுந்து நொறுங்கியது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அணு மின் நிலையத்தின் தீவிரத்தை உணராமல் அதன் மீது தாக்குதல் நடத்தும் ஒரே நாடு ரஷ்யா தான்.
அணு மின் நிலையத்தின் கூரை மீது ட்ரோன் விழுந்து நொறுங்கியது. பின்னர் தீ விபத்து ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. உலகின் இது போன்ற இடங்களின் மீது கூட ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 1986ம் ஆண்டு இந்த அணு மின் நிலையத்தில் அணு உடை வெடித்து பெரும் விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

