13,000 அடி துாரத்தில் இருந்து ரஷ்ய வீரர்களை கொன்ற உக்ரைன் வீரர்
13,000 அடி துாரத்தில் இருந்து ரஷ்ய வீரர்களை கொன்ற உக்ரைன் வீரர்
ADDED : ஆக 19, 2025 07:31 AM
கீவ் : உக்ரைன் ராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர், 13,000 அடி துாரத்தில் இருந்து இரண்டு ரஷ்ய ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்று புதிய சாதனை படைத்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே, 2022ல் துவங்கிய போர் தற் போதும் தொடர்கிறது.
'அலிகேட்டர்' போரை நிறுத்த பேச்சு நடந்து வரும் நிலையில், இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
உக்ரைனின், 'பேய்' பிரிவு என்று கூறப்படும், மறைந்திருந்து சுடுவதில் நிபுணத்துவம் பெற்ற வீரர்கள் அடங்கிய, 'பிரைவிட்' குழுவைச் சேர்ந்த வீரர் ஒருவர், 13,000 அடி துாரத்தில் இருந்த இரண்டு ரஷ்ய வீரர்களை கொன்றுள்ளார்.
உக்ரைனில் தயாரிக்கப்பட்டுள்ள, 'அலிகேட்டர்' என்ற துப்பாக்கியைப் பயன் படுத்தி, கடந்த 14ம் தேதி இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.
சாதாரணமாக இந்த துப்பாக்கியால், 3,200 அடி துார இலக்கை மட்டுமே தாக்க முடியும்.
'ட்ரோன்' செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் உதவியுடன், அந்த வீரர், இந்தத் தொலைவுக்கு சுட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் தற்போதுள்ள போக்ரோவ்க்ஸ் பகுதியில் இந்த தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 2023, நவ., 18ல், உக்ரைன் வீரர் ஒருவர், 12,400 அடி துாரத்தில் இருந்த ரஷ்ய வீரரைக் கொன்றதே, இதுவரை நீண்டதுார தாக்குதல் சாதனையாக இருந்தது.