சூடான் உள்நாட்டு போர் சவுதி கோரிக்கையை ஏற்று தலையிடுகிறது அமெரிக்கா
சூடான் உள்நாட்டு போர் சவுதி கோரிக்கையை ஏற்று தலையிடுகிறது அமெரிக்கா
ADDED : நவ 20, 2025 11:25 PM
வாஷிங்டன்: சவுதி அரேபியாவின் கோரிக்கையை ஏற்று, சூடானில் நடந்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை துவங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆட்சி நிர்வாகத்தை கையில் வைத்துள்ள சூடான் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப்., எனப்படும் துணை ராணுவப் படைக்கும் இடையே, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக மோதல் உள்ளது.
முக்கிய நகரங்களை ஆர்.எஸ்.எப்., கைப்பற்றி வருகிறது. அங்கு, இனப்படுகொலை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், இந்தப் பிரச்னையில் தலையிடுமாறு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்று, சூடானில் அமைதி ஏற்படுவதற்கான முயற்சிகளை விரைவில் துவங்குவதாக டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.

