UPDATED : ஆக 13, 2024 03:12 AM
ADDED : ஆக 12, 2024 11:57 PM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டெனால் டிர்ப்பை நேர்காணல் எடுக்கிறார் தொழிலதிபர் எலான் மஸ்க்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடக்கவுள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ்,போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 78) களம் காண்கிறார்.
அதிபர் தேர்தலில், டிரம்பை ஆதரிப்பதாக எலான் மஸ்க் அறிவித்தார். டிரம்பிற்கு, 4.5 கோடி டாலர் ( இந்திய மதிப்பு படி ரூ.375.80 கோடி) தேர்தல் நிதியாக எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கொடுக்க உள்ளார்.
இந்நிலையில் டிரம்பை நேர்காணல் எடுக்க எலான் மஸ்க் திட்டமட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேர்காணலை , தனது ‛எக்ஸ்' வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.