ADDED : ஏப் 17, 2025 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன் : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இந்தியாவை பூர்வீகமாக உடைய மனைவி உஷாவுடன் அடுத்த வாரம் இந்தியா வர உள்ளதை அவரது அலுவலகம் உறுதி செய்துள்ளது.
இது குறித்து வாஷிங்டனில் உள்ள துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
துணை அதிபர் வான்ஸ் மற்றும் அவர் மனைவி உஷா ஆகியோர் வரும் 18 முதல் 24 வரை ஐரோப்பிய நாடான இத்தாலி மற்றும் இந்தியாவுக்கு பயணம் செய்ய உள்ளனர். இந்திய வருகையின் போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்திக்கும் வான்ஸ் குடும்பம், பல்வேறு கலாசார நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளது. டில்லி, ஜெய்ப்பூர், ஆக்ரா உள்ளிட்ட நகரங்களுக்கும் வான்ஸ் மற்றும் குடும்பத்தினர் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.