‛போரை நிறுத்த ரஷ்யா உடனான உறவை பயன்படுத்துங்கள்': இந்தியாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
‛போரை நிறுத்த ரஷ்யா உடனான உறவை பயன்படுத்துங்கள்': இந்தியாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
UPDATED : ஜூலை 10, 2024 04:55 PM
ADDED : ஜூலை 10, 2024 12:37 PM

வாஷிங்டன்: 'போரை நிறுத்துவதற்கு ரஷ்யா உடனான உறவை இந்தியா பயன்படுத்த வேண்டும்' என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மார்கரெட் மேக்லியோட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: உக்ரைன்- ரஷ்யா இடையே நீண்ட காலமாக போர் நடந்து வருகிறது. போரை நிறுத்துவதற்கு ரஷ்யா உடனான உறவை இந்தியா பயன்படுத்த வேண்டும். உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளுக்கு இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் ஆதரவளிப்பது முக்கியமானதாக நாங்கள் கருதுகிறோம்.
இதனை அனைத்து நாடுகளும் உணர வேண்டியது அவசியம். போருக்கு எதிராக ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க இந்தியா இந்த சிறப்பு கூட்டாண்மையைப் பயன்படுத்த விரும்புகிறோம். குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்துகிறது. உக்ரைனில் ரஷ்யாவின் போர் ஐ.நா சாசனத்தை மீறுவதாகும். இவ்வாறு அவர் கூறினார்.