ஒட்டெடுப்பில் வெற்றி: ஜப்பான் பிரதமராக ஷிகெரு இஷிபா முறைப்படி தேர்வு
ஒட்டெடுப்பில் வெற்றி: ஜப்பான் பிரதமராக ஷிகெரு இஷிபா முறைப்படி தேர்வு
ADDED : நவ 11, 2024 04:35 PM

டோக்யோ: ஜப்பானில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியை சேர்ந்த ஷிகெரு இஷிபா(67) இன்று நடந்த பார்லிமென்ட் ஓட்டுடெடுப்பில் வெற்றி பெற்று முறைப்படி பிரதமராக தேர்வானார்.
பிரதமராக இருந்த புமியோ கிஷிடா, தொடர் ஊழல்களால், கடந்த செப்டம்பர் மாதம் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, கட்சி கூட்டத்தில், இஷிபா பிரதமராக அறிவிக்கப்பட்டார்.
ஜப்பானில் இன்று சிறப்பு பார்லிமென்ட் கூட்டத்தொடர் தொடங்கியது. புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.
மொத்தம் 465 உறுப்பினர் கொண்ட ஜப்பான் பார்லிமென்டில் பிரதமராக தேர்வு பெற 233 உறுப்பினர்கள் ஆதரவு தேவை.
எல்.டி.பி (ஆளும் கட்சி) கட்சியை சேர்ந்த இஷிபாவுக்கு 221 ஓட்டுக்களும் எதிர்கட்சி தலைவர் யோஷிஹிகோ நோடா 160 ஓட்டுக்களும் பெற்றனர். 84 ஓட்டுக்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து இஷிபா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன்படி, நாட்டின் 103வது பிரதமராக தேர்வு ஆனார்.
முன்னாள் வெளியுறவு முத்த துணை அமைச்சர் கெய்சுகே சுசுகி, நீதித்துறை அமைச்சராகவும், விவசாய துறை அமைச்சராக டகு இடோ மீண்டும் தேர்வானார்கள்.
இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.