மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் 4 பேரை கைது செய்தது மே.வங்க போலீஸ்
மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் 4 பேரை கைது செய்தது மே.வங்க போலீஸ்
ADDED : அக் 12, 2025 11:10 PM
கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், மருத்துவ கல்லுாரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் தேடப்பட்ட நான்கு பேரை, அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில், பச்சிம் வர்தமான் மாவட்டத்தின் துர்காபூரில், தனியார் மருத்துவ கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு, ஒடிஷாவைச் சேர்ந்த மாணவி, இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
விசாரணை இவர், தன் ஆண் நண்பருடன் கடந்த 10ம் தேதி இரவு உணவருந்தி விட்டு, விடுதிக்கு திரும்பிய போது அவர்களை பின் தொடர்ந்து வந்த கும்பல், அந்த மாணவியின், மொபைல் போனை பறித்ததுடன், 3,000 ரூபாய் தந்தால் மொபைல் போனை தருவதாக கூறினர்.
இதையடுத்து, பணத்தை எடுத்து வர மாணவியின் நண்பர் சென்ற நிலையில், கல்லுாரி அருகே உள்ள வனப்பகுதிக்கு மாணவியை இழுத்து சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பியோடினர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட் ட மாணவியின் நிலையை அறிந்த அவரது நண்பர், உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதித்தார்.
இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், மருத்துவ கல்லுாரி அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, தப்பி யோடிய அக்கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.
இதற் கிடையே, இச்சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ஷேக் ரியாஸ் உதின், ஷேக் பெர்தோ, ஷேக் நசிம் உதின் மற்றும் ஷேக் சோபிகுல் ஆகிய நா ன்கு பேரை போலீசார் நேற்று கைது செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, மருத்துவ கல்லுாரி ஊழியர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவியின் நண்பர்கள் உள்ளிட்ட பலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவ கல்லுாரி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், 'பாதிக்கப்பட்ட மாணவி, தன் ஆண் நண்பருடன் உணவு அருந்த, கடந்த 10ம் தேதி இரவு 7:58 மணிக்கு வெளியேறினார்.
' இதில், ஆண் நண்பர் மட்டும் இரவு 8.42 மணிக்கு கல்லுாரி வளாகத்திற்குள் மீண்டும் நுழைந்தார்.
ஆறு நிமிடங்களுக்கு பின் அவர் மீண்டும் வெளியேறினார். அதன்பின், இருவரும் இணைந்து கல்லுாரி வளாகத்திற்கு இரவு 9:29 மணிக்கு உள்ளே நுழைந்தனர். இதைத்தொடர்ந்து, அம்மாணவி தன் விடுதி அறைக்கு இரவு 9:31 மணிக்கு சென்றார்' என, குறிப் பிட்டுள்ளது.
ஒடிஷா முதல்வர் கண்டனம் பா.ஜ.,வைச் சேர்ந்த ஒடிஷா முதல்வர் மோகன் சரண் மஜி சமூக வலைதளத்தில் கூறுகையில், 'மேற்கு வங்கத்தில் ஒடிஷா மாணவிக்கு நடந்த கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் துரதிரு ஷ்டவசமானது.
'இது, வேதனையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இந்த விவகாரத்தில், சட்டத்தின்படி துரித நடவடிக்கை எடுக்கும்படி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கேட்டுக்கொள்கிறேன்' என, தெரிவித்துள்ளார்.
இரவில் வெளியே செல்லக்கூடாதாம்
முதல்வர் மம்தா விசித்திர 'அட்வைஸ்'
மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியதாவது: ஒடிஷா மாணவிக்கு நேர்ந்த துயரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற குற்றங்களை, ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது. இச்சம்பவத்துக்கு, அக்கல்லுாரி நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும். விடுதிகளில் தங்கும் மாணவியர், இரவு நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் போலீசாரால் பாதுகாப்பு அளிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.