உண்மையான தலைவர் யார்; மைக்ரோசாப்ட் சி.இ.ஓ., சொல்வதை கேளுங்க!
உண்மையான தலைவர் யார்; மைக்ரோசாப்ட் சி.இ.ஓ., சொல்வதை கேளுங்க!
ADDED : செப் 28, 2024 12:51 PM

வாஷிங்டன்: இன்றைய காலகட்டத்தில் உண்மையான தலைவர் யார் என்பது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.,) புது விளக்கம் அளித்து உள்ளார்.
லிங்க்ட் இன் இணை நிறுவனர் ரெய்ட் ஹோப் மேனுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சத்ய நாதெல்லா கூறியதாவது: இன்றைய உலகிற்கு தலைவர்களிடம் இருந்து ஆற்றலும் உற்சாகமும் தான் தேவை. எதிலும் ஈடுபடுவது என்பது எளிது. ஆனால், தலைவர்களுக்கான உண்மையான அளவுகோல் என்பது, ஒரு சூழ்நிலை வரும் போது, தெளிவை கொண்டு வந்து உற்சாகத்தை ஏற்படுத்தி தீர்வு காண்பதுவே ஆகும். இந்த மூன்றும் இருந்தால், உலகம் சிறந்த இடமாக இருக்கும்.
உலகில் 85 சதவீத நிர்வாகிகள், தங்களது ஊழியர்கள் கடினமாக உழைக்கவில்லை என கருதுகிறார்கள். ஆனால், 85 சதவீதம் தொழிலாளர்கள் கடினமாக உழைப்பதாகவும் எண்ணுகின்றனர். இதுதான் உண்மையான நிலவரம்.
தலைவராக, நாம் என்ன மாதிரியான முடிவுகள் வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்பதை எப்படி தெளிவுபடுத்துவது குறித்து நாம் கற்றக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.