ஆட்சியை தக்க வைப்பாரா ரிஷி சுனக்: பிரிட்டனில் பொதுத்தேர்தல் துவங்கியது
ஆட்சியை தக்க வைப்பாரா ரிஷி சுனக்: பிரிட்டனில் பொதுத்தேர்தல் துவங்கியது
UPDATED : ஜூலை 04, 2024 01:06 PM
ADDED : ஜூலை 04, 2024 12:43 PM

லண்டன்: பிரிட்டன் பார்லிமென்டிற்கு பொதுத் தேர்தல் துவங்கி நடந்து வருகிறது. இதனையடுத்து பிரதமர் பதவியை ரிஷி சுனக் தக்க வைப்பாரா அல்லது பறி கொடுப்பாரா என்பது விரைவில் தெரியவரும்.
பிரிட்டனில் கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியை சேர்ந்த 5 பேர் பிரதமர் பதவி வகித்தனர். கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதும் போரீஸ் ஜான்சன் பிரதமர் பதவியேற்றார். அவர் பதவி விலகியதை அடுத்து லிஸ் டிரஸ் பிரதமர் ஆனார். 2022 ல் பதவி விலகியதால், இந்திய வம்சாளவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமர் ஆக பதவியேற்றார். இவரது பதவி காலம் 2025 ஜனவரியில் நிறைவடைகிறது. ஆனால், பார்லிமென்ட் முன்கூட்டியே கலைக்கப்பட்டது. இன்று ஜூலை 4ம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மொத்தமுள்ள 650 உறுப்பினர்களை கொண்ட பிரிட்டன் பார்லிமென்டிற்கு தேர்தல் துவங்கி நடந்து வருகிறது. இத்தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும். மற்றொரு கட்சியான, கெயிர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது. லிபரல் ஜனநாயக கட்சி, சீர்திருத்த யுகே கட்சி, ஸ்காட்டிஸ் தேசிய கட்சி கிரீன் கட்சி ஆகியவையும் தேர்தல் களத்தில் உள்ளன.