ADDED : ஜன 01, 2026 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: தென்னிலை அருகே, மயங்கி விழுந்த கட்டட தொழிலாளி உயி-ரிழந்தார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அரக்கன்-கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ், 38, கட்டட தொழி-லாளி. திருமணமானவர். இவர் கடந்த, 24 மதியம் தென்னிலை அருகே வைரமடை பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென மயங்கி கீழே விழுந்த பாக்கியராஜை, அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்-துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சிகிச்சையில் இருந்த பாக்கியராஜ், நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். இதுகுறித்து, பாக்கியராஜ் மனைவி சுகுணா, 30, போலீசில் புகார் செய்தார்.
தென்னிலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

