உலக கோப்பை செஸ்: பைனலில் ஹம்பி, திவ்யா; வரலாறு படைத்த இந்தியா
உலக கோப்பை செஸ்: பைனலில் ஹம்பி, திவ்யா; வரலாறு படைத்த இந்தியா
UPDATED : ஜூலை 25, 2025 07:53 AM
ADDED : ஜூலை 25, 2025 12:01 AM

பதுமி: உலக கோப்பை செஸ் தொடரின் பைனலுக்கு இந்திய வீராங்கனைகள், ஹம்பி, திவ்யா இருவரும் முன்னேறினர்.
ஜார்ஜியாவில், பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. இதன் அரையிறுதியில் அசத்திய இந்தியாவின் திவ்யா, சீனாவின் ஜோங்கியை வீழ்த்தி, முதன்முறையாக பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் கொனேரு ஹம்பி, சீனாவின் லெய் டிங்ஜீ மோதினர். இரண்டு போட்டிகளின் முடிவில் ஸ்கோர் 1.0 - 1.0 என சமநிலையில் இருந்தது.
நேற்று, 'டை பிரேக்கர்' நடந்தது. இதன் முதல் போட்டியில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி, 65வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். இரண்டாவது போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய ஹம்பி, 39வது நகர்த்தலில் வெற்றி பெற, 2.0 - 2.0 என மீண்டும் சமநிலை வகித்தது.
அடுத்த 4 போட்டியில், 3ல் அசத்திய ஹம்பி, முடிவில் 5.0 - 3.0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். பைனலில் இந்தியாவின் ஹம்பி, திவ்யா மோதுகின்றனர். உலக கோப்பை பைனலுக்கு முதன்முறையாக இரண்டு இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்று வரலாறு படைத்தனர்.

