உலகின் மிகப்பெரிய 'சேல்ஸ்மேன்' ஜெலன்ஸ்கி: உக்ரைன் அதிபரை சாடிய டிரம்ப்
உலகின் மிகப்பெரிய 'சேல்ஸ்மேன்' ஜெலன்ஸ்கி: உக்ரைன் அதிபரை சாடிய டிரம்ப்
UPDATED : செப் 24, 2024 10:56 PM
ADDED : செப் 24, 2024 10:34 PM

பென்சில்வேனியா: '' அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரீஸ் வெற்றி பெற வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரும்புகிறார். அவர் உலகின் மிகப்பெரிய விற்பனையாளராக திகழ்கிறார்,'' என குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.
பென்சில்வேனியாவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் டிரம்ப் பேசியதாவது; நவம்பர் மாதம் நடக்கும் அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியை காட்டிலும் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாகவே ஜெலன்ஸ்கி நடந்து கொள்கிறார். ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரீஸ் வெற்றி பெற வேண்டும் என அவர் விரும்புகிறார்.
உலக வரலாற்றில் மிகப்பெரிய விற்பனையாளராக ஜெலன்ஸ்கி உள்ளார். ஒவ்வொரு முறையும் அவர் அமெரிக்கா வரும்போது 60 பில்லியன் டாலர்களை எடுத்து செல்கிறார். உக்ரைனுக்கு அமெரிக்கா அளிக்கும் உதவி மூலம் ஜெலன்ஸ்கி பலனடைந்து வருகிறார். இவ்வாறு நிதியுதவியை பெற்று வருவதால் தான் அவர் ஜனநாயக கட்சியினரை விரும்புகிறார். ஆனால், நான் வேறு மாதிரி செயல்படுவேன். அமைதியை ஏற்படுத்துவேன். இவ்வாறு டிரம்ப் பேசினார்.