sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

ஸ்ரீ ரமண மகரிஷி 145வது ஜெயந்தி

/

ஸ்ரீ ரமண மகரிஷி 145வது ஜெயந்தி

ஸ்ரீ ரமண மகரிஷி 145வது ஜெயந்தி

ஸ்ரீ ரமண மகரிஷி 145வது ஜெயந்தி


டிச 17, 2024

டிச 17, 2024


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுதில்லி : பகவான் ரமண மகரிஷி 145வது ஜெயந்தி (மார்கழி புனர்வசு). லோதி சாலையில் உள்ள ரமண கேந்திராவில் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

காலை 9.00 மணிக்கு, குரு வந்தனம், கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதையடுத்து, கலச ஸ்தாபனம், ருத்ர நமகம், ஸ்ரீ ரமண அஷ்டோத்திர பூஜை , அதைத் தொடர்ந்து தைத்திரீய உபநிடதம் பாராயணம் நடைபெற்றது. குரு சந்திரசேகர் தலைமையில், வேத விற்பன்னர்கள் மற்றும் ரித்விக்குகள் பலர் இதில் பங்கேற்று பாராயணம் செய்தனர். பக்தர்கள் திரளாக பங்கேற்று, ஸ்ரீ ரமண மகரிஷியின் உபதேச சாரத்தை வாசித்தனர்.


காலை 10 மணிக்கு, ஜெயந்தி அய்யர் அக்ஷரமணமாலை மற்றும் ரமணர் பஜனை பாடல்களை பாடினார். பிறகு ஆராதனையுடன் நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தம்மைக் கண்டறிவதற்காகத் தனக்குள்ளேயே ஆழ்ந்து வருபவனே தனக்குப் பிரியமானவன் என்று பகவான் கூறியுள்ளார். பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் உண்மையான பக்தராக இருக்க முயற்சிப்போம், அவரில் நிலைத்திருப்போம்.


- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்







      Dinamalar
      Follow us