/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
பிரதமர் இல்லத்தில் புத்தக வெளியீட்டு விழா
/
பிரதமர் இல்லத்தில் புத்தக வெளியீட்டு விழா
டிச 19, 2024

தேசிய கவிஞர் சுப்ரமணிய பாரதியின் 143 வது பிறந்த நாளை ஒட்டி அவரது படைப்புகள் பற்றிய புத்தகம் ' கால வரிசையில் பாரதி படைப்புகள் 'வெளியிடப்பட்டது.
இதை சென்னை சீனிவிஸ்வநாதன் தனது பல ஆண்டுகள் உழைப்பில் ஈடுபாட்டில் பாரதியின் எழுத்துக்களை கால வரிசைப்படி தொகுத்துள்ளார். ஐந்து பகுதிகள் கொண்ட மிக விரிவான தொகுப்பினை தனது அறுபது ஆண்டுகள் உழைப்பில் நாட்டிற்கு அர்பணித்துள்ளார். இதனை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் வெளியிட்டு தேசிய கவிஞரின் சுதந்திர தாகத்தை, மற்றும் திருவள்ளுவரின் திருக்குறளை உயர்வாக பேசினார்.
பாரதியின் சுதந்திர தாகம் அதை எழுத்தில் கவிதையாக கட்டுரைகளாக பத்திரிகையில் வெளியிட்டது. தவிர இயற்கை ஆன்மிகம் குழந்தைகள் என தன்னை சார்ந்த சுற்றியுள்ள சமூகநலத்தில் அவரின் கவனம் ஈடுபாடு என் பாரதியை நம்முன் நிறுத்தினார். மேலும் பாரதிக்கும் தனக்கும் காசி நகரம் ஒரு இணைப்பாலமாக இருப்பதை நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். தான் செல்லும் நாடுகளில் பாரதி பற்றியும் திருக்குறள் பற்றியும் பேசுவதோடு செல்லும் இடமெல்லாம் தமிழின் உயர்வை பகிர்ந்துகொள்வதில் பெருமைப்படுவதாக குறிப்பிட்டார்.
விழாவில் கலாச்சாரதுறையின் அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத், இணை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங், பாராளுமன்ற இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தலைநகரில் தமிழனின் புத்தகம் பிரதமர் இல்லத்தில் வெளியீடு நடைபெறுவது தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் தருணம். இந்த விழாவில் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி