/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
காமாட்சி கோவிலில் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவரின் 31வது ஆராதனை
/
காமாட்சி கோவிலில் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவரின் 31வது ஆராதனை
காமாட்சி கோவிலில் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவரின் 31வது ஆராதனை
காமாட்சி கோவிலில் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவரின் 31வது ஆராதனை
டிச 27, 2024

உம்மாச்சி தாத்தா என்று செல்லமாக குழந்தைகளாலும் மஹா பெரியவா என்று அனைத்து பக்த கோடிகளால் அன்புடன் அழைக்கப்படும் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியான ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 31-வது ஆராதனை வைபவம் மஹா பெரியவா பக்தர்களால் வெகு விமரிசையாக நாடு முழுதும் கொண்டாடப்பட்டது.
புது தில்லி அருணா அசப் அலி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி காமாக்ஷி மந்திரில் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவரின் 31வது ஆராதனை வைபவம் மிக விமரிசையாக நடைபெற்றது. காலை 8. 00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவசனம், கலச ஸ்தாபனம், மஹன்யாஸ பாராயணம் நடைபெற்றன. 10.00 மணிக்கு ஏகாதச ருத்ர ஜபம், ஸ்ரீருத்ரநாம த்ரிஸதீ நாமார்ச்சனை, ஸிவாஷ்டோத்தர ஸத நாமாவளி மற்றும் கலச அபிஷேகம் நடைபெற்றது. வேத விப்பனர்கள் மற்றும் ரித்விக்குகள் இதில் திரளாக பங்கேற்று 11 ஆவர்த்தி ருத்ர பாராயணம் செய்தனர்.
தில்லி வயலின் இசைக் கலைஞர் உமா அருண் இதில் பங்கேற்று இசை சமர்ப்பணம் செய்தார். கோவிலில் அமைந்துள்ள ஆதிசங்கரர் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தோடகாஷ்டகம் சொல்லி நிகழ்ச்சி நிறைவு செய்ய பெற்றது. பக்தர்கள் திரளாக இதில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. முடிவில் தீர்த்தநாராயண பூஜை நடைபெற்றது.
-- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்