/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
செந்தமிழ்ப்பேரவை சார்பில் ஏழைகளுக்கு இலவச போர்வை
/
செந்தமிழ்ப்பேரவை சார்பில் ஏழைகளுக்கு இலவச போர்வை
டிச 29, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தில்லி மயூர் விகார் பேஸ் 3ல் உள்ள செந்தமிழ்ப்பேரவை சார்பில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, மயூர் விகார் பேஸ் 3ல் உள்ள ரோட்டோரத்தில் வசிக்கும் 200 ஏழை எளிய மக்களுக்கு அவர்களின் கடும் குளிரைப் போக்கும் வண்ணம் தரமான போர்வை (Bed sheet) இலவசமாக வழங்கப்பட்டது .
தலைவர் A.மாரி தலைமையிலும் செயலாளர் S.சரவணன் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் G.S.விஜயகுமார், N.ராஜ்மோகன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியினை பொருளாளர் K.செல்வக்குமார் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
- தலைவர் A.மாரி; செயலாளர் S.சரவணன்