/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
செந்தமிழ்ப் பேரவை சார்பில் 78வது சுதந்திர தின விழா
/
செந்தமிழ்ப் பேரவை சார்பில் 78வது சுதந்திர தின விழா
செந்தமிழ்ப் பேரவை சார்பில் 78வது சுதந்திர தின விழா
செந்தமிழ்ப் பேரவை சார்பில் 78வது சுதந்திர தின விழா
ஆக 15, 2024

டில்லி மயூர்விஹார் பேஸ் 3 இல் உள்ள செந்தமிழ்ப் பேரவை சார்பில் 78 வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை இணைசெயலாளர் K.செல்வக்குமார் தொகுத்து வழங்கி வரவேற்றார். தலைவர் A. மாரி கொடியேற்றி தலைமை தாங்கினார். செயலாளர் S. சரவணன் முன்னிலை வகித்தார். செந்தமிழ்ப் பேரவையின் தமிழ் ஆசிரியை முத்துலட்சுமிமாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் பேசிய சிறுவர் சிறுமியர் சுதந்திரத்தின் பெருமையையும், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களை பற்றியும் சிறப்பாக பேசினர். விழாவில் பேசிய சிறுவர் சிறுமியர்களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன . விழா ஏற்பாடுகளை துணைபொருளாளர் ரவிக்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அருள்செல்வம் , தங்கராஜா வெங்கடாசலபதி ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் செந்தமிழ்ப் பேரவையின் துனைதலைவர் A M ஆறுமுகம் நன்றி உரை வழங்கினார்.