/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
துவாரகா ஸ்ரீ ராம் மந்திரில் ஸ்ரீ ஹனுமன் சாலிசா அகண்ட பாராயணம்
/
துவாரகா ஸ்ரீ ராம் மந்திரில் ஸ்ரீ ஹனுமன் சாலிசா அகண்ட பாராயணம்
துவாரகா ஸ்ரீ ராம் மந்திரில் ஸ்ரீ ஹனுமன் சாலிசா அகண்ட பாராயணம்
துவாரகா ஸ்ரீ ராம் மந்திரில் ஸ்ரீ ஹனுமன் சாலிசா அகண்ட பாராயணம்
ஆக 16, 2024

புதுடில்லி : 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தில்லி துவாரகா செக்டார் 7-ல் அமைந்திருக்கும் ஸ்ரீ ராம் மந்திரில், உலக நன்மை வேண்டி, ஸ்ரீ ஹனுமன் சாலிசா அகண்ட பாராயணம் நடைபெற்றது.
காலை 8.30 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து ஸ்ரீ ஹனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றன. கோவில் அர்ச்சகர் ஆஷிஷ் இதனை நடத்தி வைத்தார்.
காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை, ராம்குமார் தலைமையில், ஸ்ரீ ஹனுமன் சாலிசா அகண்ட பாராயணம் (108 முறை ) நடைபெற்றது. ஆன்மிக அன்பர்கள் திரளாக இதில் பங்கேற்று பாராயணம் செய்தனர்.
இதையடுத்து, ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. மேலும், இந்த அலங்காரத்துடன் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்