/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
தமிழை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் முயற்சி
/
தமிழை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் முயற்சி
தமிழை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் முயற்சி
தமிழை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் முயற்சி
ஆக 11, 2025

புதுடில்லி; மயூர் விஹார்-3, தமிழர் நலக் கழகத்தின் தமிழ் வகுப்பு மாணவ மணிகளுக்கான தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் தமிழ் ஆரம்ப நிலை, இடைநிலை மற்றும் மேல்நிலைத் தேர்வுகள் ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோவில், மயூர் விஹார்-3, தில்லி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த கழகத்தின் வாயிலாக பயின்ற மொத்தம் 32 மாணவ மணிகள் தமிழ் தேர்வுகளை எழுதினர். தேர்வு நடத்த சென்னை தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பாக . கோ. விஜி , மற்றும் ப. மீனாட்சி தேர்வாளராக வந்திருந்தார்கள். தேர்வுகள் 10.08.2025, காலை 10.00 மணி முதல் 12.30 வரையிலும், மதியம் 2.00 மணிமுதல் மாலை 3.00 மணிவரையில் கணினி மூலம் தேர்வுகள் நடந்தது.
உதவியவர்களுக்கு நன்றி
தமிழ் வகுப்பிற்கு மேஜைகள் மற்றும் நாற்காலிகள் வழங்கிய மில்இந்தியா லிமிடெட், நொய்டா நிர்வாகத்திற்கும் அதற்கு ஏற்பாடு செய்த செயற்குழு உறுப்பினர் ஆர். சுந்தர் ராஜனுக்கும் தமிழர் நலக் கழகம் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டது.தேர்வு எழுத இடம் தந்து ஆதரித்த ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோவில் நிர்வாகிகளுக்கும் தமிழர் நலக் கழகம் தனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.மேலும், நமது கோவில்கள் ஆன்மிகப் பணிகள் தவிர கல்வி மற்றும் கலாச்சாரப் பணிகளையும் பண்டைய காலம் தொட்டு இன்றுவரை செய்து வருவது மிகவும் பாராட்டுதல்களுக்குரியது.
அன்று மன்னர்கள் இப்பணியினைச் செய்தார்கள். இன்று மக்களே அதை முன் நின்று நடத்திச் செல்கிறார்கள்.
இங்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் தமிழர் நலக் கழகத்தின் சார்பில் நண்பகல் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேர்வுகள் சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் கா. சிங்கத்துரை, தலைவர், தி. பாஸ்கரன், பொதுச் செயலாளர், செயற்க்குழு உறுப்பினர்கள் ஆர். சுந்தர் ரராஜன், ஜி. ரெங்கநாதன், எம். மதன், எஸ். பிரகாஸ், ஆசிரியர்கள் ந. பாலசுப்பிமணியன், எச். ரமேஷ், அம்பிகா நீலகண்டன் திறம்பட செய்திருந்தனர்.
பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால், தாய் மொழிப் பற்றுடன் தமிழை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் அனைத்து நல்நெஞ்சங்களும் பாராட்டுதல்களுக்குரியவர்கள்.
- நமது செய்தியாளர் மீனாவெங்கி.
