அக் 26, 2026

நொய்டா கோவில்களில் அன்னாபிஷேகம்
அன்னாபிஷேகத்தை ஒட்டி, வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் நிர்வாகம் அதன் விநாயகா மற்றும் கார்த்திகேயா கோவிலில், செக்டார் 62, நொய்டாவில் உள்ளசந்திரமௌலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் ஏற்பாடு செய்தது. காய்கறிகளால் 'மாலை' வழங்கப்பட்டது. பக்தர்கள் பல்வேறு ஸ்லோகங்களை கூறி சிவபெருமானை வழிபட்டனர். மகா தீபாராதனைக்குப் பிறகு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
நொய்டா, செக்டர் 22ல் அமைந்துள்ள அதன் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் இதே போன்ற பூஜைகள் நடைபெற்றன. மகா தீபாராதனைக்குப் பின் மகா பிரசாதம் வழங்கப்பட்டது. அனைத்து பூஜைகளும் வி பி எஸ் ஆஸ்தான வாத்தியார் ஷங்கர் சாஸ்திரியால் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், கோயில் வாத்தியார்கள் மணிகண்டன் சர்மா, மோஹித் மிஸ்ரா மற்றும் ஜெகதீஷ் சிவாச்சாரியார் ஆகியோரின் உதவியுடன் செய்யப்பட்டது.
- நொய்டாவில் இருந்து நமது செய்தியாளர் வெங்கடேஷ்
