தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/நொய்டா கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி

நொய்டா கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி

நொய்டா கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி


அக் 30, 2026

Follow on GoogleFavourite on Google

அக் 30, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

நொய்டா கோவில்களில் ஸ்ரீ சங்கடஹர சதுர்த்தி
ஸ்ரீ சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, நொய்டா செக்டார் 62-இல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் காலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. மாலையில், சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் கணபதி ஸ்லோகங்கள் வாசித்தும், விநாயகப் பெருமானைப் போற்றி பாடல்களை பாடி வழிபட்டனர்.
இதே போல், நொய்டாவின் பழமையான விநாயகர் கோவில்களில் ஒன்றாகக் கருதப்படும் செக்டார் 22-இல் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில், இக்கோயிலில் விநாயகருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மகா தீபாராதனை பிறகு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.
தடைகளை நீக்கி, ஞானம், செல்வம் மற்றும் நல்ல வாய்ப்புகளை வழங்கும் தெய்வம் விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஸ்ரீ சங்கடஹர சதுர்த்தி நன்னாளில் பக்தர்கள் அவரை தீவிரமாக வழிபடுகின்றனர்.
வரசித்தி விநாயகர் கோவில் மற்றும் விநாயகா மற்றும் கார்த்திகேயா கோயில்கள், ஒரே எண்ணம் கொண்ட பக்தர்களால் தொடங்கப்பட்டு, கடந்த 40 ஆண்டுகளாக சேவையாற்றி வரும் வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் (VPS) அமைப்பினால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
- நொய்டாவில் இருந்து நமது செய்தியாளர் வெங்கடேஷ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us