/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
நொய்டா கோவிலில் 'அனுஷம்' நட்சத்திர பூஜை
/
நொய்டா கோவிலில் 'அனுஷம்' நட்சத்திர பூஜை
ஜூன் 21, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நொய்டா, செக்டார் 62, ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் 'அனுஷம்' நட்சத்திர பூஜை நடந்தது. ஐந்தாவது ஆண்டாக, மாதந்தோறும் 'அனுஷம்' நட்சத்திர பூஜை, தடையின்றி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் 'ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா' என்று கோஷமிட்டபடியும், ஸ்ரீ காஞ்சி மகா பெரியவரைப் போற்றிப் பாடல்கள் பாடியபடியும் காணப்பட்டனர். அனைத்து பூஜைகளையும் கோவில் வாத்தியார்கள் மணிகண்டன் சர்மா மாற்று மோஹித் மிஸ்ர செய்தனர். மகா தீபாராதனையுடன் பூஜை நிறைவடைந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்