
நொய்டா கோயிலில் ஆருத்ரா தரிசனம்
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு , நொய்டா, செக்டார் 62ல் உள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயர் கோவிலில் பதினோரு திரவியங்களுடன் மகா அபிஷேகம் நடைபெற்றது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடப்பது போல் அனைத்து அபிஷேகங்களும் நடந்தன .
நடராஜர் மற்றும் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அனைத்து அபிஷேகங்களும் கோவில் வாத்தியார்கள் ஸ்ரீ மணிகண்டன் சர்மா மற்றும்ஸ்ரீ மோஹித் மிஸ்ரா ஆகியோர் செய்தனர். அன்றைய தினம் மகா தீபாராதனையுடன் நிறைவுபெற்று 'திருவாதிரை களி' பிரசாதம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. கடுமையானகுளிர்காலம் / மோசமான காற்றின் தரம் பற்றி கவலைப்படாமல் வந்து பூஜைகளில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகம் நன்றி தெரிவித்தது.
- நொய்டாவில் இருந்து நமது செய்தியாளர் வெங்கடேஷ்
