sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

ஆர்யா ரமேஷின் பரத அரங்கேற்றம்

/

ஆர்யா ரமேஷின் பரத அரங்கேற்றம்

ஆர்யா ரமேஷின் பரத அரங்கேற்றம்

ஆர்யா ரமேஷின் பரத அரங்கேற்றம்


ஏப் 24, 2025

ஏப் 24, 2025


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தில்லி ஹம்சினி நடன பள்ளி மாணவியும் குரு ஸ்ரீதர் வாசுதேவனின் சிஷ்யையுமான ஆர்யா ரமேஷின் பரத அரங்கேற்றம் தில்லி தமிழ்ச்சங்கம் வள்ளுவர் அரங்கில் நடைபெற்றது. விழாவின் முக்கிய விருந்தினராக மோகினி ஆட்ட கலைஞர் ஜெயப்பிரதா மேனனும் சிறப்பு விருந்தினராக கதகளி கலைஞர் திருவட்டாறு ஜெகதீசனும் வந்திருந்து சிறப்பித்தனர்.

புஷ்பாஞ்சலியில் தொடங்கி கார்த்திகேயா ஸ்லோகத்திற்கு அழகுற அபிநயித்து அடுத்து வந்த சாராதா புஜங்கத்திற்கு அவையோரை மெய்சிலிர்க்க வைத்தார். அப்படியே அம்பாள் அரங்கில் வந்தது போன்ற அற்புத பாவத்துடன் கூடியஅபிநயம். பாபநாசம் சிவனின் தன்யாசி வர்ணம் அன்றைய முக்கிய அயிட்டம். குரு வாசுதேவனின் கலைஅம்சமிக்க நடனகோர்வைகள் ஆர்யாவின் உள்வாங்கி வெளிப்படுத்தும் உணர்வு பூர்வ நிருத்யம் அருமை அருமை.


இடைவெளிக்கு பிறகு ஸ்வாதியின் பதம், மனம் கொள்ளை கொண்ட குறத்தி நடனம் இறுதியில் மத்யமாவதியில் குருவின் தில்லானாவுடன் நிறைவுபெற்றது. நட்டுவாங்கம் குரு வாசுதேவன் மற்றும் அனன்யா சங்கர், பாட்டு குரு வாசுதேவன் மிருதங்கம் மனோகர் வயலின் ராகவேந்திரா பிரசாத் அருமையான கூட்டணி. நடன அரங்கேற்றத்துடன் மாணவி அனன்யாவின் நட்டுவாங்க அரங்கேற்றமும் ஹம்சினிக்கு கிடைத்த ரத்தினங்கள்.


விழா விருந்தினர்கள் மாணவர்களை ஆசீர்வதித்தும் குருவின் கலை ஆர்வத்தை பாராட்டியும் பேசினர். நடனகலைஞர் கமலினி தத், கலை ஆர்வலர் மீனா வெங்கி வாழ்த்தி பேசினர்.


ஆர்யா கலையுலகில் பிரகாசிக்க வாழ்த்துக்கள்.


- நமது செய்தியாளர் மீனாவெங்கி







      Dinamalar
      Follow us