
மயூர் விகார் சுப சித்தி விநாயகர் ஆலயத்தில் மயூர் விகார் செளத் இண்டியன். அசோசியேஷனின் 44வது வருட ராமநவமி உற்சவம் மிகவும் கோலாகலமாக நடந்தேறியது.
மார்ச் 29 தேதி தொடங்கி ராமநவமி தினம் ஏப்ரல் 6 தேதி வரை ராமர் ஜனனம் முதல் பட்டாபிஷேகம் வரை காலையில் மூல பாராயணமும் மாலையில் கதையும் நடைபெற்றது. பரையனூர் கிருஷ்ண பிரேம்ஜியின் சிஷ்யர் பிரம்மஸ்ரீ யக்யராம பாகவதர் அவரது துணைவியார் இருவரும் நடத்தி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து இருநாள் சங்கீத மும்மூர்த்திகள் நினவாக சங்கீத பிரியர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகள் தொடர்ந்தன. இசை ஆர்வலர் மீனா வெங்கி டிரினிட்டி வைபவத்தை வழிநடத்தினார். முத்தாய்ப்பாக தியாகராஜரின் பஞ்சரத்னபாடல்களை தனது மாணவர்கள் பாட குரு வாசுதேவன் அபிநயித்தது மிகுந்த வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், பாகவத சூடாமணி  சங்கர் பாகவதர் தலைமையில் சீதாராமன் கல்யாண வைபவத்துடன் இனிதே நிறைவுற்றது. கோவில் கமிட்டி உறுப்பினர்கள் இரண்டு வார உற்சவத்தை மிக நேர்த்தியாக திட்டமிட்டு, ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டது பாராட்டும் வண்ணம் இருந்தது. 
- நமது செய்தியாளர் மீனா வெங்கி
