தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/டில்லியில் ஆவணி அவிட்டம்

டில்லியில் ஆவணி அவிட்டம்

டில்லியில் ஆவணி அவிட்டம்


ஆக 19, 2024

Follow on GoogleFavourite on Google

ஆக 19, 2024


Latest Tamil News
அ நிறம் | அளவு

புது டில்லியில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி மந்திர் (பி.சி. பிளாக், சாலிமார் பாக்), ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோவில் (மயூர் விஹார், பேஸ்-3), ஸ்ரீராம் மந்திர் (7வது செக்டார், துவாரகா), ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் (சரோஜினி நகர்) மற்றும் ஸ்ரீ சுப சித்தி விநாயகர் கோவில் (மயூர் விகார் பேஸ் 1), உட்பட பல இடங்களில் ஆவணி அவிட்ட தினத்தன்று பூணூல் மாற்றும் வைபவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
ஆவணி மாத பவுர்ணமி திதியும், அவிட்ட நட்சத்திரமும் இணைந்து வரும் நாள், ஆவணி அவிட்டமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், பழைய பூணூலை மாற்றி, புதிய பூணூல் அணிவர். முறையாக காயத்ரி மந்திரம் உபநயனம் செய்த பிராமணர்கள், இதை மேற்கொள்வர். இந்த சடங்கு முறைக்கு, 'உபாகர்மா' என்று பெயர். உலக நலன், சமுதாய முன்னேற்றம், குடும்ப வளர்ச்சி உள்ளிட்டவைகளுக்காக பிரார்த்தனை செய்து, ஏராளமானோர் புதிய பூணூல் மாற்றினர்.

- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us