தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/கேனோபநிஷத் நடன நிகழ்ச்சி

கேனோபநிஷத் நடன நிகழ்ச்சி

கேனோபநிஷத் நடன நிகழ்ச்சி


ஏப் 18, 2026

Follow on GoogleFavourite on Google

ஏப் 18, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

கேனோபநிஷத் நடன நிகழ்ச்சி
கேன் உபநிடத்தின் சாராம்சத்தை விளக்கும் வகையில் டில்லி கமானி அரங்கில் சுஸ்ரீ நிகிஷா நந்தா குழுவினரின் நடன நிகழ்ச்சி கடந்த வியாழக்கிழமை ( 16/4/26) அன்று நடைபெற்றது.
கேன உபநிடதம் சாமவேதத்தில் அமைந்துள்ள இந்த உபநிடதம் ”கேன” என துவங்குவதால் இதற்கு கேன உபநிடதம் என்று பெயர் ஆயிற்று. 'கேன' என்பதற்கு சமஸ்கிருதத்தில் 'கேள்வி' என்று பொருள். இவ்வுபநிடதம் கேள்வியுடன் துவங்குவதால் இதற்கு கேன உபநிடதம் பெயராயிற்று. இந்த உபநிடதம் 35 மந்திரங்களுடன், நான்கு பகுதிகள் கொண்டது. இந்த உபநிடதத்திற்கு ஆதிசங்கரர், மத்வர் ஆகிய மகான்கள் விளக்க உரை எழுதி உள்ளனர்.
எனது உடல் உறுப்புக்கள் ஆற்றல் பெறட்டும். அந்த ஆத்மாவை அறியும் வழியில் முழு ஈடுபாடுடைய என்னிடத்தில் உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள தகுதிகள் எவையோ அவை என்னிடத்தில் இருக்கட்டும். உடல் எப்படி சடமோ, அதுபோல் மாற்றத்தை அடைந்து கொண்டிருக்கும் மனமும் சடம் என உணர்ந்து, இவற்றுக்கு வேறான , மாறாத, நிலையான மெய்ப்பொருள் உள்ளதா? என்ற சீடனின் கேள்வியுடன் இவ்வுபநிடதம் துவங்குகிறது.
அதற்கு குருவின் பதில்: எந்த பொருளை, வாக்கு, மனம், கண்கள் முதலியவைகளை விளக்காதோ, ஆனால் எந்த மெய்ப்பொருளால் மனம், பொருள், வாக்கு முதலியவைகளை விளக்குகின்றனவோ, அந்த மெய்ப்பொருளான பிரம்ம தத்துவத்தை அறிந்துகொள் என்று சீவனும் - பரமாத்மாவும் ஒன்றே (ஐக்கியம்) தத்துவத்தை கூறி , இதுவரை நீ எவற்றை வழிபட்டு வந்தாயோ, அவை அனைத்தும் உனக்கு உதவிய படிகளே தவிர மெய்ப்பொருள் அல்ல என்று உபதேசம் செய்கிறார். புலனடக்கம், கர்ம யோகம், வாய்மை ஆகிய வழிகள் மூலம் பிரம்ம ஞானத்தை அடையலாம். மேலும் இந்த ஞானத்தின் பலனாக ஒருவன் மேலான சீவ முக்தி மற்றும் விதேக முக்தி அடைகிறான்.
இந்த தத்துவத்தை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் நாட்டிய வடிவில் ஆங்காங்கே உடநிட வரிகள் விளக்கங்களை உரையாடலாக தொகுத்து ஜனரஞ்சகமாக இந்த நாட்டிய நடனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மற்ற நடனத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதுடன் ஆழமான கருத்தை குருவின் உபதேச வழிமுறையில் இக்காலத்திய ஒலி ஒளி அமைப்புக்களுடன் தயாரித்ததை பாராட்டலாம்.
ஒடிசி நடன கலைஞர் நிதிஷா நந்தா பரத கலைஞர் ஸ்ரீதர் வாசுதேவன் மற்றும் கதக் மோகினி ஆட்டம், சாகூ , க்ஷைத்திரிய கலைஞர்கள் சுமார் 26 பேர் பங்கேற்ற நடன கோர்வை. இதை ஹரியானா கர்னால் மதுபன் அர்பனா டிரஸ்ட் ஏற்பாடு செய்திருந்தனர்.சுஸ்ரீ நிதிஷா நந்தாவின் அமைஸா அமைப்பு பொறுப்பேற்று அரங்கேற்றியுள்ளனர்.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us