sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

உலக நன்மை வேண்டி சண்டி ஹோமம்

/

உலக நன்மை வேண்டி சண்டி ஹோமம்

உலக நன்மை வேண்டி சண்டி ஹோமம்

உலக நன்மை வேண்டி சண்டி ஹோமம்


மே 05, 2025

மே 05, 2025


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுதில்லி: உலக நன்மை வேண்டி, சத்பரி சத்குரு ஸ்ரீ ஞானானந்த ஆசிரமத்தில் சண்டி ஹோமம் நடந்தது. வேத பண்டிதர்கள் சரவணன் சாஸ்திரிகள், ஸ்ரீராமன் கனபாடிகள், கிருபாசங்கர் சர்மா, புஷ்பேந்தர் சர்மா, ஆதர்ஷ் சர்மா, ஸ்ரீனிவாஸ் சர்மா மற்றும் மகேந்திர சர்மா இதில் பங்கேற்றனர். இதையடுத்து, கோ பூஜை, பாண்டுரங்கனுக்கு கலச அபிஷேகம், சுமங்கலி, வடு, கன்யா மற்றும் தம்பதி பூஜைகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். பூர்ணாஹுதிக்கு பிறகு தீபாராதனை காட்டப்பட்டது.

மண்டலாபிஷேகம் நிறைவை ஒட்டி, நாமசங்கீர்த்தனம் நடைபெற்றது. பால கோகுலம் குழுவைச் சார்ந்த பாகவதர்கள் ஜெ. ராமகிருஷ்ணன் சுனில், விஸ்வநாதன், ராமபத்திரன் நொய்டாவைச் சார்ந்த தியாகு, ஜெயராமன் மற்றும் தில்லிவாழ் பாகவதர் குழுவினர் இதில் பங்கேற்று பாண்டுரங்கன் ஆசி பெற்றனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


சண்டி ஹோமம்


சண்டி ஹோமம் என்பது ஒருவரது வாழ்க்கையில் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவதற்காக பொதுவாக செய்யப்படும் ஹோமங்களில் முதன்மையானது. இந்த சண்டி ஹோமம் அனைத்து விதமான தோஷங்களையும், தடைகளையும் நீக்கும் சக்தியும் கொண்டது.


- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்







      Dinamalar
      Follow us