
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெளர்ணமியை ஒட்டி, புது தில்லி ஆர்.கே.புரம், செக்டார் 1-ல் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில், உலக நன்மை வேண்டி, காலை சண்டி ஹோமம் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக பங்கேற்று பூஜையில் ஈடுபட்டனர். பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.-
- நமது செய்தியாளர் எம்வி.தியாகராஜன்