
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தில்லி கியாலா, ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில், சித்ரா பெளர்ணமியை ஒட்டி, மாலை அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து சர்வ அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
சித்ரா பௌர்ணமி
சித்ரா பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று சைவ மக்களால் கொண்டாடப்படும் ஒரு விரத நாளாகும். இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள். அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும்.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகரஜன்