தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/நவராத்திரியின் போது கோயிலுக்கு வருகை தந்த குழந்தைகள்

நவராத்திரியின் போது கோயிலுக்கு வருகை தந்த குழந்தைகள்

நவராத்திரியின் போது கோயிலுக்கு வருகை தந்த குழந்தைகள்


அக் 15, 2026

Follow on GoogleFavourite on Google

அக் 15, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தைகளுக்கு இந்தியாவின் செழுமையான கலாச்சார மற்றும் ஆன்மிக மரபுகளை தெரிந்துகொள்வதற்காக, நொய்டா செக்டார் 62-ல் அமைந்துள்ள செரெனோவா (முன்பு ஐரிஸ்) பள்ளியின் மாணவர்கள், நவராத்திரியை முன்னிட்டு அதே பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோயில் வளாகத்திற்கு வருகை தந்தனர்.
கோயில் வளாகத்தில் நவராத்திரியை முன்னிட்டு பாரம்பரிய முறையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான தெய்வச் சிலைகளை குழந்தைகள் பார்வையிட்டனர். தென்னிந்தியாவில் நவராத்திரியின் போது கடைப்பிடிக்கப்படும் 'கொலு' பாரம்பரியத்தின் சிறப்புகள் மற்றும் அதன் கலாச்சார முக்கியத்துவம் குறித்து கோயில் நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர்கள் குழந்தைகளுக்கு விளக்கினர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இளம் தலைமுறையினருக்கு இந்தியாவின் பாரம்பரியக் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்துவதற்கும், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் மீது குழந்தைகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த வருகை ஒரு சிறந்த முயற்சியாக அமைந்தது. குழந்தைகள் நமது தொன்மையான மரபுகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள உதவிய பள்ளி நிர்வாகத்தின் முயற்சிகளை கோயில் நிர்வாகம் பாராட்டியது.
சமீப காலத்தில் இப்பள்ளி மாணவர்கள் இந்தக் கோயிலுக்கு வருகை தருவது இது இரண்டாவது முறையாகும்.
- நொய்டாவில் இருந்து நமது செய்தியாளர் வெங்கடேஷ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us