/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
ஸ்ரீ மீனாட்சி கோவிலில் தீப பூஜை வழிபாடு
/
ஸ்ரீ மீனாட்சி கோவிலில் தீப பூஜை வழிபாடு
ஆக 16, 2025

ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு, புதுடில்லி சாலிமார் பாக், ஸ்ரீ மீனாட்சி கோவிலில், தீப பூஜை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். அதைத் தொடர்ந்து, ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தீப பூஜை என்பது விளக்குகளை ஏற்றி இறைவனை வழிபடும் ஒரு பூஜை முறையாகும். இந்த பூஜையானது, ஒளி மற்றும் இருளை நீக்கும் இறைவனின் வடிவத்தை வழிபடுவதாக கருதப்படுகிறது. இது ஞானம், செல்வம் மற்றும் ஆரோக்கியம் போன்ற பலன்களை வழங்கும் என்று நம்பப்படுகிறது. தீப பூஜையை எந்த வயதினரும் செய்யலாம்.
சிவலிங்கமே ஜோதி உருவம், ஆகையால் தீப வழிபாடு - விளக்கு ஏற்றி வணங்குதல் திருமுறைகளில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. தீபம் ஏற்றாது சிவா வழிபாடு செய்வதில்லை. ஜோதியே சிவம், சிவமே ஜோதி. திருக்கார்த்திகை தீபமாகத் திருவண்ணாமலையில் உயரும் ஜோதியே இங்கு நம் இல்லங்கள் தோறும் உள்ளங்கள் தோறும் ஒளிர்கிறது.
- நமது செய்தியாளர், எம்.வி.தியாகராஜன், புதுடில்லி
