/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
டில்லி கோவில்களில் கோகுலாஷ்டமி கொண்டாட்டம்
/
டில்லி கோவில்களில் கோகுலாஷ்டமி கொண்டாட்டம்
ஆக 17, 2025

புதுடில்லி: கோகுலாஷ்டமியை முன்னிட்டு, சரோஜினி நகர் ஸ்ரீ சித்தி புத்தி அம்பாள் சமேத கற்பக விநாயகர் கோவிலில், ஸ்ரீ சூர்ய நாராயண சாஸ்திரிகள் தலைமையில், சனிக்கிழமை (ஆக-16) காலை ஸ்ரீ மகா சுதர்சன ஹோமம் மற்றும் விஷேச பூஜைகள் நடைபெற்றது.
சுதர்சன ஹோமம் என்பது பகவான் விஷ்ணுவின் சக்கரமான சுதர்சன சக்கரத்திற்கு செய்யப்படும் ஒரு ஹோமம். இந்த ஹோமம், தீய சக்திகளை அகற்றி, வாழ்வில் நன்மைகளை அளிக்கும் என்று நம்பப்படுகிறது. இதை செய்வதன் மூலம், எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, ஆன்மிக பலம் கிடைக்கும்.
ஸ்ரீ ஜஸ்வர்ய மகா கணபதி கோவில், கேசவ்புரம்
மாலை 7.00 மணிக்கு, ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, குரு மோனிகா வெய்த் -
'நாட்டியக்கலா கிருகா' பள்ளியின் மாணவிகள் நடத்திய பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இசை ஆர்வலர்கள் திரளாக பங்கேற்று நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர்.
ஸ்ரீ மீனாட்சி மந்திர், சாலிமார் பாக்
கிருஷ்ண ஜெயந்தி விழா மிகு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீ ராம் மந்திர், துவாரகா
ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி கொண்டாடப்பட்டது. மாலை 6.00 மணிக்கு நவநீத கிருஷ்ணனுக்கு அபிஷேகம் துவங்கி, சஹஸ்ரநாம அர்ச்சனை, விஷ்ணு சஹஸ்ரநாமம், நாராயண பாராயணம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனையும், கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன், புதுடில்லி
