/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
சொல்ல சொல்ல இனிக்குதடா, 'நொய்டா செக்டர் 62 முருகர் கோவில்' !
/
சொல்ல சொல்ல இனிக்குதடா, 'நொய்டா செக்டர் 62 முருகர் கோவில்' !
சொல்ல சொல்ல இனிக்குதடா, 'நொய்டா செக்டர் 62 முருகர் கோவில்' !
சொல்ல சொல்ல இனிக்குதடா, 'நொய்டா செக்டர் 62 முருகர் கோவில்' !
ஆக 18, 2025

பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 15 முதல் 17 வரை மூன்று நாட்கள் விழா நொய்டா செக்டர் 62, ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் நடைபெற்றது . முதல் நாளன்று, வேத மந்திரங்கள் முழங்க, மஹா கணபதி ஹோமம் 1008 ஆவர்த்தி, கொழுக்கட்டை, மற்றும் அப்பம் ஆகியவையால் நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
இக்கோவிலின் மஹா கும்பாபிஷேகம் 21 ஆகஸ்ட் 2022 அன்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து மஹா அபிஷேகம், மஹா தீபாராதனை, பிறகு மஹா பிரசாதம் விநியோகிக்கப்பட்டது . மாலையில் திருப்புகழ் பாடல்கள், திவ்ய நாம சங்கீர்த்தனம், ஜே ராமகிருஷ்ணன்
மற்றும் சுனில் (அ) நூரனி சூடாமணி மற்றும் குழுவினர் வழங்கினார்கள் .
இரண்டாவது நாளன்று , நவகிரக ஹோமம், மஹா மிருத்தியுஞ்சய ஹோமம், ராம ஷடாக்ஷர ஹோமம், அபிஷேகம், மஹா தீபாராதனையை தொடர்ந்து மஹா பிரசாதம் அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்பட்டது. மாலையில், குமாரி சாய் கிருபா கர்நாடக இசை வழங்கினார். பக்க வாத்தியம் : உமா அருண் - வயலின் மற்றும் ஜி சுவாமிநாதன் - மிருதங்கம் வாசித்தனர் .
இசை கச்சேரி
கடைசி நாளில் காலையில், கோவில் நிர்வாகம் சுப்பிரமணியர் ஹோமம், தொடர்ந்து மஹா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மஹா தீபாராதனை, மற்றும் மஹா பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது . மேலும், மாலையில், விதூஷி பாம்பே லட்சுமி ராஜகோபாலன் கர்நாடக அவர்களின் இசை கச்சேரி நடந்தது . பக்க வாத்தியத்தில் ஜி. ராகவேந்திர பிரசாத் வயலின், மனோகர் பாலச்சந்திரனே மிருதங்கம்,
வருண் ராஜசேகர் கடம் வாசித்தனர் . இந்நிகழ்ச்சியை புது தில்லியின் சண்முகானந்த சங்கீத சபா மற்றும் வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர் . சண்முகானந்த சங்கீத சபா குழு உறுப்பினர் அனைத்து கலைஞர்களையும் மற்றும் இசை ஆர்வலர்களையும் வரவேற்றார். வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் தலைவர் ரவி சர்மா அனைவரையும் கௌரவித்தார். மேலும், வி விஸ்வநாதன், துணைத் தலைவர் கச்சேரி குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார், மற்றும் நன்றியுரை வழங்கினார்.
அனைத்து பூஜை மற்றும் ஹோமங்களும் ப்ரஹ்மஸ்ரீ ஸ்ரீராம் வாத்தியார் மற்றும் பிரஹ்ம ஸ்ரீ சங்கர் வாத்தியார் வழிகாட்டுதலும், மேற்பார்வையில், கோவில் வாத்தியார்கள் : ஸ்ரீ மணிகண்டன் சர்மா,மோஹித் மிஸ்ரா மட்டுமல்லாமல் பண்டிதர்கள் : ஹரி ஷங்கர், ராஜா ராம் , ரிஷி, ஆதர்ஷ், கிஷன், அபிஷேக்,சதீஷ் பட், கணபதி, ஹிமான்ஷு, உதவியுடன் வெகு சிறப்பாக நடந்தது.
கோவில் நிர்வாகம், தன்னார்வலர்கள், ஸ்பான்சர்கள், நன்கொடையாளர்கள், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் மண்டலி, பல்வேறு குழு உறுப்பினர்கள், இதில்: ரவி சர்மா, ராதாகிருஷ்ணன், ராஜு ஐயர், ராமசேஷன், பாலாஜி, வெங்கடேஷ், வி விஸ்வநாதன், ராஜேந்திரன், வெங்கட்ராமன், அர்ஜுன் மற்றும் பராமரிப்பு ஊழியர்ககளை பாராட்டியது. தவிர, பக்தர்கள் பெரும் மழையையும் பொருட்படுத்தாமல் அனைத்து பூஜைகளில் கலந்து கொண்டதற்கு கோவில் நிர்வாகம் நன்றி தெரிவித்தது.
மேலும், இந்த நாள் சுதந்திர தினத்துடன் ஒத்துப்போனதால், ஒவ்வொரு ஆண்டும் போல வி பி எஸ் நிர்வாகம் கொடி ஏற்றம் விழா நடந்தது. இதனை வி பி எஸ்ஸின் மூத்த உறுப்பினர் ஸ்ரீ வி சிவராமன் அவர்கள் ஏற்றினார் .
செக்டர் 22 இல் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் வாராந்திர பாராயணத்தை தடையில்லாமல் கடந்த 30 வருடத்துக்கும் மேலாக வழங்கி வரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் மண்டலியின் முயற்சிகளை கோயில் மேலாண்மை பாராட்டியது. அதே போல் செக்டர் 62 இல், ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பாராயணம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் நொய்டாவில் ஒட்டுமொத்த எண்ணம் கொண்ட பக்தர்களால் தொடங்கப்பட்டது. கடந்த நாற்பது ஆண்டுகளாக பக்தர்களுக்கு சேவை செய்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் நொய்டாவின் பல்வேறு செக்டார்களிலிருந்து மட்டுமல்லாமல், கிரேட்டர் நொய்டா, டெல்லி, இந்திராபுரம், வைஷாலி, காசியாபாத், குருகிராம் பகுதிகளிலிருந்தும் வந்திருந்தனர் .
-நமது செய்தியாளர், வெங்கடேஷ்.
