/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
துவாரகா ஸ்ரீராம் மந்திரில் தர்ம சாஸ்தா பூர்ண புஷ்கலா தேவி திருக்கல்யாணம்
/
துவாரகா ஸ்ரீராம் மந்திரில் தர்ம சாஸ்தா பூர்ண புஷ்கலா தேவி திருக்கல்யாணம்
துவாரகா ஸ்ரீராம் மந்திரில் தர்ம சாஸ்தா பூர்ண புஷ்கலா தேவி திருக்கல்யாணம்
துவாரகா ஸ்ரீராம் மந்திரில் தர்ம சாஸ்தா பூர்ண புஷ்கலா தேவி திருக்கல்யாணம்
நவ 03, 2025

துவாரகா ஸ்ரீராம் மந்திரில் தர்ம சாஸ்தா பூர்ண புஷ்கலா தேவி திருக்கல்யாணம்
புதுடில்லி : துவாரகா ஸ்ரீ ராம் மந்திரில், ஞாயிற்றுக்கிழமை (நவ-2)தர்ம சாஸ்தா, பூர்ண புஷ்கலா தேவி திருக்கல்யாணம் ஸ்ரீ சுனில் பாகவதர் தலைமையிலான பாலகோகுலம் குழுவினரால் விமரிசையாக நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீராம் மந்திர் செய்திருந்தது. 
கல்யாண வைபவத்தைமுன்னிட்டு, முதல் நாள் (நவ-1)  மாலை பாலகோகுலம் குழுவினரால் 17 அஷ்டபதிகள்  மற்றும் நிறைவு நாளன்று (நவ-2) 18வது சாஸ்தா கல்யாண அஷ்டபதி பாராயணம் செய்யப்பட்டது. ஐயப்பனுக்கு 18 படிகள் இருப்பது போல் 18 அஷ்டபதிகளும் உள்ளன.சாஸ்தா அஷ்டபதிகள் என்பவை எட்டுவித சாஸ்தா வடிவங்கள் ஆகும். அவை ஆதி மகா சாஸ்தா, தர்ம சாஸ்தா, ஞான சாஸ்தா, கல்யாண வரத சாஸ்தா, சம்மோகன சாஸ்தா, சந்தான பிராப்தி சாஸ்தா, வேத சாஸ்தா மற்றும் வீர சாஸ்தா ஆகியவை ஆகும். ஒவ்வொரு வடிவமும் குறிப்பிட்ட அருள் மற்றும் பலன்களை வழங்குவதாக நம்பப்படுகிறது. 
நிகழ்வில், உமா அருண் (வயலின்), என். எஸ். கிருஷ்ணன் (மிருதங்கம்) , அரவிந்த் பாபு (ஹார்மோனியம்), என். அனந்த கிருஷ்ணன் (டோல்கி) ஆகியோர் பக்க வாத்தியம் வாசித்தனர். பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
ஐயப்பனின் திருமணம்:
பிரம்மச்சரிய வடிவத்தில் சபரிமலையில் ஐயப்பன் யோக நித்திரையில் இருந்தாலும், வேறு சில தலங்களில் அவர் புஷ்கலா தேவியைத் திருமணம் செய்ததாகக் கருதப்படுகிறது.
பூர்ண புஷ்கலா கல்யாணம்
தர்ம சாஸ்தா (ஐயப்பன்) உடன் பூரணி மற்றும் புஷ்கலா தேவியைத் திருமணம் செய்து வைக்கும் ஒரு தெய்விகத் திருவிழா ஆகும். இந்தத் திருக்கல்யாணம் ஐயப்பனின் திருமணமான வடிவத்தைக் கொண்டாடுகிறது. சில கோவில்களில், குறிப்பாக சபரிமலைக்குச் செல்லாத போது, திருமணம் ஆன கோலத்தில் ஐயப்பனை வழிபடும் வகையில் இந்த விழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்வில் பங்கேற்பது, வியாபார விருத்தி, பொருளாதார மேம்பாடு போன்ற நன்மைகளைத் தரும் என்று நம்பப்படுகிறது. 
- புதுடில்லியிலிருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்
