/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
டில்லி சரோஜினி நகர் ஶ்ரீ விநாயகர் கோவிலில் பௌர்ணமி அன்னாபிஷேக
/
டில்லி சரோஜினி நகர் ஶ்ரீ விநாயகர் கோவிலில் பௌர்ணமி அன்னாபிஷேக
டில்லி சரோஜினி நகர் ஶ்ரீ விநாயகர் கோவிலில் பௌர்ணமி அன்னாபிஷேக
டில்லி சரோஜினி நகர் ஶ்ரீ விநாயகர் கோவிலில் பௌர்ணமி அன்னாபிஷேக
நவ 06, 2025

டில்லி சரோஜினி நகர் ஶ்ரீ விநாயகர் கோவிலில் பௌர்ணமி அன்னாபிஷேகம்
ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி, புதுடில்லி சரோஜினி நகர் ஶ்ரீ விநாயகர் கோவிலில் மஹன்யாச ஏகாதசருத்ர ஜபம், சிறப்பு அபிஷேகம் மற்றும் ஸ்ரீ ஓம்காரேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு அன்னாபிஷேக அலங்காரத்தில் காட்சியளித்த சிவனை வழிபட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.பின், காய்கறிகள், பழங்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தேவி ஸ்ரீராஜேஸ்வரிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அன்னாபிஷேகம்
அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளிப்பவன் சிவன். அதைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சரத் பூர்ணிமா என்ற ஐப்பசி பௌர்ணமி நாளில் அனைத்து சிவாலயங்களிலும் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது. சாம வேதத்திலே 'அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னாதோ' என்று கூறப்பட்டுள்ளது,
அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். அந்த வகையில் ஐப்பசி மாத பெளர்ணமியில் சிவபெருமானுக்கு சுத்தமான அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷமானதாகும்.
- புதுடில்லியிலிருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்
