
நொய்டா கோவிலில் 'அன்னாபிஷேகம்'
அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, நொய்டா செக்டர் 62 ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் பல விதமான கறிகாய்களுடன் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரரை அலங்கரித்தனர். வி.பி.எஸ். ஆஸ்தான வாத்தியார்கள் ஷங்கர் மற்றும், ஸ்ரீராம் வழிகாட்டுதலின் கீழ், கோவில் வாத்தியார்கள் மணிகண்டன், மோஹித் மிஸ்ரா, கணபதி உதவியுடன் நடத்தப்பட்டது. கடுமையான மாசுக்கு இடையே திரளாக வந்திருந்த பக்தர்களின் பக்தியை கோயில் நிர்வாகம் பாராட்டியது. மகா தீபாராதனைக்குப் பின் அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.
இவ்விழாவை முன்னிட்டு, ஆன்மிக சொற்பொழிவு 'சர்வம் சிவமயம் உபன்யாசம்' என்ற தலைப்பில் சேங்காலிபுரம் ஸ்ரீ சுப்ரமண்ய தீக்ஷிதர் வழங்கினார் . தொடர்ந்து ஸ்ரீராம், தீக்ஷிதரை சபையில் கூடியிருந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். கோவில் தலைவர் ரவி சர்மா தீக்ஷிதரை கெளரவித்தார்.
-நொய்டாவில் இருந்து நமது செய்தியாளர் வெங்கடேஷ்
