sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

புதுடில்லி

/

கர்நாடக சங்கீத சபாவின் தெய்வீக இசைமாலை

/

கர்நாடக சங்கீத சபாவின் தெய்வீக இசைமாலை

கர்நாடக சங்கீத சபாவின் தெய்வீக இசைமாலை

கர்நாடக சங்கீத சபாவின் தெய்வீக இசைமாலை


அக் 15, 2025

அக் 15, 2025


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிழக்கு தில்லி ஸ்ரீ சுப சித்தி விநாயகர் ஆலயமும் கர்நாடக சங்கீத சபாவும் இணைந்து சங்கீத இசை மாலையை கோவில் வளாகத்தில் ஞாயிறு( 12/10/25) ஏற்பாடு செய்திருந்தனர். முதலாவதாக மேரி இளங்கோவின் மாணவி விஜயஸ்ரீயின் பரத நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து சென்னை பாபநாசம் அசோக் ரமணியின் கர்நாடக சங்கீத நிகழ்வு நடைபெற்றது.


வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் என்ற ஔவையின் வரிகளை விருத்தமாய் பாடி மூலவர் வேழமுகத்தோனை ' சித்தி விநாயகம் அனிசம் என்ற தீட்சிதர் கிருதியில் ஷண்முகப்ரியாவில் போற்றி வணங்கி அடுத்ததாக பரிச்சயமான தியாகராஜரின் சீதாபதே நாமனசுநா. அதில் ப்ரேமசூசிநாபையில் நிரவல் ஸ்வரம் அமைத்து அழகுபடுத்திக் கொண்டு குவித்த புருவமும் கோவை செவ்வாயும் முன்னோட்டத்தோடு கம்பீரமாக கற்பகமனோகராவை எடுத்தார். அதே இடத்தில் ஸ்வரம். ஸ்ரீதரின் வயலின் துணையோடு அவையோரை மகிழ்வித்தார்.


பாபநாசம் சிவனுக்கு மயிலை நாதர் மீது அலாதி ஈடுபாடு. எல்லா தருணத்திலும் அவரிடமே தஞ்சம். அப்படித்தான் கேள்வி பதில் பாணியில் நம்பிக்கெட்டவர் எவரைய்யா.. பாடல் வரிகள் வரும். பலமுறை கேட்டிருந்தாலும் மீண்டும் கேட்பதில் சுகம். ரசிக்க வைத்தார். அன்றைய முக்கிய கிருதியாக மீனாட்சி மேமுதம் ..அந்த மதுராபுரி நாயகியை பக்கவாத்ய பலத்தோடு நம் கண்முன் நடமாட வைத்தார். மதுராபுரி நிலயேவில் நிரவல் ஸ்வரம் . தனி ஆவர்த்தனம் சென்னை அக்ஷய் ராம் இணைந்து இயைந்து வாசித்தது அமர்க்களம்.


விறுவிறுப்பாக என்ன தவம் செய்தனை, மனமே கணமும் மறவாதே ஈசன் மலர்பதமே, ..நிறைவாக ஆடும் மயில் உருவெடுத்தது விருத்த முன்னோட்டத்துடன் கற்பகமே கண்பாராய் என்ற பிரபலமான பாடலுடன் இசை மாலையை நிறைவு செய்தார்.


சிறப்புவிருந்தினர்கள் கோபாலகிருஷ்ணன் (director ministry of Steel govt of india), ரகுநாதன் ( former chief secretary, govt of Delhi) தமிழ் சங்க செயலர் முகுந்தன் ஆகியோர் வாழ்த்தி பேசி கலைஞர்களை கெளரவித்தனர். அவர்களை கோவில் சார்பிலும் கர்நாடக சங்கீத சபா சார்பிலும் கெளரவித்தார்கள். இனிமையான தெய்வீக மணம் கமழ்ந்த இசைமாலை ரசிகர்களுக்கு விருந்து.


- புதுடில்லியிலிருந்து நமது செய்தியாளர் மீனா வெங்கி







      Dinamalar
      Follow us